அமைச்சரவை பட்டியலுடன் ஆளுனர் மாளிகையில் ஸ்டாலின்! – பதவியேற்பு ஏற்பாடுகள் தீவிரம்
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிபெற்ற நிலையில் ஆட்சியமைக்க உரிமை கோரி மு.க.ஸ்டாலின் ஆளுனரை சந்தித்துள்ளார்.
நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் 7ம் தேதி ஆளுனர் மாளிகையில் எளிமையான முறையில் முதல்வராக பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில் நேற்று திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடந்து முடிந்த நிலையில் திமுக அமைச்சரவை பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதை இன்று தமிழக ஆளுனரிடம் நேரில் சென்று அளித்துள்ள மு.க.ஸ்டாலின் பதவியேற்க உரிமை கோரியுள்ளார். அவருடன் திமுக பொதுசெயலாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்ளிட்டோரும் உடன் சென்றுள்ளனர்.