திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 2 ஜூலை 2021 (12:13 IST)

வரலாறு முக்கியம்…! தலைவர்களுக்கு புத்தகங்களை பரிசளிக்கும் முதல்வர்!

தமிழகம் வந்த துணை குடியரசு தலைவர் வெங்கய்ய நாயுடுவை வழியனுப்புகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புத்தகத்தை பரிசாக வழங்கியுள்ளார்.

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது தொடங்கி தன்னை சந்திக்க வருபவர்களை புத்தகம் பரிசளிக்கும்படி கேட்டுக் கொண்டு வருகிறார். சமீபத்தில் கொரோனா நிவாரணம் வழங்க முதல்வரை சந்திக்க வந்தவர்களிடமும் பூச்செண்டு, சால்வைகளை தவிர்த்து புத்தகங்கள் வழங்க அறிவுறுத்தினார்.

இந்நிலையில் தற்போது தான் சந்திக்கும் அரசியல் தலைவர்களுக்கும் வரலாற்று புத்தகங்களை வழங்குவதை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழக்கமாக்கியுள்ளார். தமிழகம் வந்த துணை குடியரசு தலைவர் இன்று விடைபெற்று செல்கையில் அவருக்கு வரலாற்று ஆய்வாளர் ஆர்.நாகசாமி எழுதிய மகாபலிபுரம் குறித்த புத்தகத்தை பரிசாக அளித்துள்ளார். முன்னதாக டெல்லியில் சோனியா காந்தியை சந்தித்தபோதும் புத்தக பரிசளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.