வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 27 ஜனவரி 2021 (12:03 IST)

அரசு பணத்தில் அம்மா நினைவிடமா? எவ்வளவு சுயநலம்? – மு.க.ஸ்டாலின் ஆந்தங்க அறிக்கை!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவகம் இன்று திறக்கப்பட்டுள்ள நிலையில் அதுகுறித்து எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சென்னை மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. 80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தை இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைக்கின்றனர்.

இந்நிலையில் ஜெயலலிதா நினைவகத்தை திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கோ, துணை முதல்வர் ஓபிஎஸ்கோ என்ன அருகதை இருக்கிறது? என கேள்வி எழுப்பி மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் அரசு செலவில் ஜெயலலிதா நினைவிடம் அமைப்பது போன்ற இழிவான சுயநல அரசியல் நாடகம் வேறில்லை” எனவும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.