செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 27 ஜனவரி 2021 (11:17 IST)

ஜெயலலிதா நினைவிடம் திறப்பு; தொண்டர்களுக்கு தனி ரயில் புக் செய்த அமைச்சர்!

சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிட திறப்பு விழாவிற்கு அமைச்சர் தனிரயிலில் தொண்டர்களை அழைத்து வந்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சென்னை மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. 80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தை இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைக்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியை காண தமிழத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அதிமுக தொண்டர்கள் வருகை புரிந்துள்ளனர். இந்நிலையில் மதுரை மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 1500 தொண்டர்கள் இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் செல்லூர் ராஜூ சிறப்பு ரயிலை முன்பதிவு செய்துள்ளார். மேலும் அவர்கள் நிகழ்ச்சி முடிந்து ஊர் திரும்பவும் இன்று மாலை சிறப்பு ரயில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.