வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 2 டிசம்பர் 2019 (13:25 IST)

எடப்பாடிக்கு எடுபிடியாக தேர்தல் ஆணையம்! – ஸ்டாலின் கண்டனம்

ஊரக உள்ளாட்சி தேர்தலை மட்டும் தேர்தல் ஆணையம் நடத்துவது குறித்து பெரும் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் ஸ்டாலின்.

கடந்த மூன்று வருடங்களாக நடக்காமல் இருந்த உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் மாதத்தில் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது. புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு வார்டு பிரிக்காமல், பெண்கள், பழங்குடியினருக்கு தேர்தலில் இட ஒதுக்கீடு தருவது குறித்து விளக்காமல் எப்படி தேர்தல் நடத்த முடியும் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இந்நிலையில் டிசம்பர் 27 மற்றும் 30 ல் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின் “எந்த சட்ட விதிமுறைகளையும் கடைபிடிக்காமல் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எடுபிடியாக பணி செய்யும் தமிழக தேர்தல் ஆணையத்திற்கு கண்டனங்களை தெரிவித்து கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

மேலும் ”நீதிமன்றம் முன்பே சட்டரீதியா முறைப்படி தேர்தலை நடத்த வேண்டும் என கூறியிருந்தும் தேர்தலுக்கு தேவையான எந்த நடவடிக்கைகளையும் எடுக்காமல், தன் எண்ணம் போல் சட்டங்களை போட்டு சர்வதிகாரம் செய்து வரும் அதிமுக அரசை கண்டிக்கிறேன். இந்த தடையெல்லாம் தாண்டி உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றிபெற்று எதிரிகள் முகத்தில் கரியை பூசும்” என்று கூறியுள்ளார்.