புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 16 ஜூலை 2021 (12:32 IST)

நீட் தேர்வை மீண்டும் பரிசீலிக்கவும்: மோடிக்கு ஸ்டாலின் கோரிக்கை!

நீட் போன்ற தேசிய அளவிலான தேர்வுகளை நடத்தும் முடிவை பிரதமர் மறு பரிசீலனை செய்ய வேண்டும். 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. 
 
இதனிடையே, கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக 6 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகம், ஆந்திரா, கேரளா, மராட்டியம் மற்றும் ஒடிசா மாநில முதல்வர்கள் கலந்துக்கொண்டனர். 
 
இந்த ஆலோசனை கூட்டத்தின் போது நீட் போன்ற தேசிய அளவிலான தேர்வுகளை நடத்தும் முடிவை பிரதமர் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்துள்ளார்.