அரசு கல்லூரிகளை தொடர்ந்து தனியாரிலும் சேர்க்கை உயர்வு! – அமைச்சர் பொன்முடி தகவல்!
நடப்பு கல்வி ஆண்டில் அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடங்கள் உயர்த்தப்படும் என கூறப்பட்டிருந்த நிலையில் தனியார் கல்லூரிகளிலும் உயர்த்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கல்லூரிகல் தொடங்கப்பட்டு செயல்பட்டு வரும் நிலையில் மாணவர்கள் கடந்த ஆண்டுகளை விட அதிகமாக கல்லூரிகளில் சேர விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அனைத்து அரசு கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை இடங்களை 20% அதிகரிக்க உள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தனியார் கல்லூரிகளிலும் மாணவர்கள் நலன் கருதி மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக தனியார் கல்லூரிகளில் 10% இடங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்த அமைச்சர் பொன்முடி தற்போது 15% ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.