வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 9 மார்ச் 2019 (12:46 IST)

இது தேவையா ? பிரேமலதா விஜயகாந்துக்கு அமைச்சர் அறிவுரை

கடந்த சில தினங்களாக திமுக பொருளாளர் துரைமுருகனுக்கும், தேமுதிக துணைப் பொதுச்செயலாளர் சுதீஸுக்கும் இடையே கருத்து மோதல்கள் எழுந்தன. கூட்டணி தொடர்பாக பேச்சு வார்த்தைகள் சம்பந்தமாக ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டினர். இதற்கு நேற்று விளக்கம் அளித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா செய்தியாளர்களை நீ, வா , போ, உனக்கு என்று ஒருமையில் பேசினார். இதனால் அப்போது சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தேமுதிக ரகசியமாக திமுகவுடன் கூட்டணி குறித்து பேசும் அதே வேளையில் அதிமுகவுடனும் கூட்டணி குறித்து பேசுவதாகவும் பேசப்பட்டது. ஆனால் திமுக பொருளாளரிடம் சொந்த விஷயமாக தேமுகவினர் பேச வந்ததை துரைமுருகன் செய்தியாளர்களுக்கு வெளிச்சம் போட்டுக் காண்பித்ததாக  தேமுதிக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் திமுக மீது குற்றம் சாட்டினர்.
 
இந்நிலையில் நேற்று தேமுதிக பொருளாளர் பிரேமலதாவின் பேச்சு  குறித்து அமைச்சர் ஜெயக்குமார்  கருத்து கூறியிருக்கிறார்.
தரமணி உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்.ஜி.ஆர் சிலையை திறந்து வைத்து அமைச்சர் ஜெயக்குமார்  கூறியதாவது:
 
’37 அதிமுக எம்.எல்.ஏக்களால் பயன் ஏதுமில்லை என பிரேமலதா கூறியதை ஏற்க முடியாது.. தேமுதிக மென்மையான போக்கை கடைபிடிக்கவில்லை. என்றும், 37 எம்பிக்களால் பயன் இல்லை என பிரேமலதா கூறியதை ஏற்க முடியாது என்றார். மேலும் பத்திரிக்கையாளர்களை ஒருமையில் பேசியதை பிரேமலதா தவிர்த்திருக்கலாம், யாராக இருந்தாலும் ஒருமையில் பேசக்கூடாது. யாரையும் கடுமையாக பேசியிருந்தாலும் விமர்சித்திருந்தாலும் மறப்போம் மன்னிப்போம்’ என்று கூறி பிரேமலதாவுக்கு ஜெயக்குமார் அறிவுரை கூறியுள்ளார்.