அனைத்து பேருந்துகளிலும் GPS கருவி: அமைச்சர் சிவசங்கர் தகவல்
அனைத்து அரசு பேருந்துகளிலும் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
அனைத்து அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளிலும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு சென்னை பஸ் செயலி மூலம் பேருந்துகளின் இருப்பிடத்தை அறிந்து கொள்ளும் சேவை விரிவுபடுத்தப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
பேருந்து இருப்பிட விவரத்தை செயலி மூலமாக பயணிகள் அறிந்து கொள்ளவும் பாதுகாப்பு கருதி தங்களது உறவினர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பவும் இந்த வசதி உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
இந்த செயலி மூலம் தனியாக பயணிக்கும் பெண் பயணிகள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பாதுகாப்பான முறையில் பயணம் கிடைக்கும் என்றும் இந்த செயலி மூலம் முன்பதிவு செய்த பயணிகளுக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Edited by Siva