1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Anandakumar
Last Updated : செவ்வாய், 3 மே 2022 (00:02 IST)

அமைச்சர் செந்தில்பாலாஜி ஒரு கிச்சன் கேபினட்- எம்.ஆர்.விஜயபாஸ்கர்

vijayabashkar mr
திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் மற்றும் குடும்பமே சென்றது ரூ 5 ஆயிரம் கோடி மதிப்பிலான வால்மார்ட் நிறுவனம் போன்ற லுலு நிறுவனத்தினை வாங்க தான் என்று கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிரடி பேச்சு.
 
மேலும், அமைச்சர் செந்தில்பாலாஜி ஒரு கிச்சன் கேபினட் என்றும் – திமுக விற்கும், கரண்ட் கட்டிற்கும் நல்ல ராசி இருக்குது என்றும், இந்த திமுக ஆட்சி கவிழ்கின்றது என்றால் அதுமின்சாரத்துறையினாலும், செந்தில்பாலாஜியாலும் மட்டும் தான் கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிரடி பேச்சு
 
கரூரில் அதிமுக தொழிற்சங்கம் சார்பில் மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் மருதூர் திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிறப்புரையாற்றினார். அப்போது, இந்தியாவில் அதிகளவு உள்ள தொழிலாளர்கள் விவசாய தொழிலாளர்கள் தான், ஆனால், தமிழகத்தில் ஏழை மக்களுக்கு 2 ஏக்கர் நிலம் கொடுப்போம் என்று வாக்குறுதி கொடுத்து விட்டு மக்களை ஏமாற்றினார். பின்னர் கையளவு நிலம் தருகின்றேன் என்றும், அந்த நிலமும் தரவில்லை, ஆகவே, தந்தை முதல் மகன் வரை திமுக ஆட்சியில் வெறும் பொய் வாக்குறுதிகள் தான், ஆனால் அன்று மறைந்த அப்போதைய திமுக தலைவர் மு.கருணாநிதி இறக்கும் போது எந்த வித வழக்குகளும் தொடுக்காமல், பெரிய மனசு செய்ததால் தான் மெரினா பீச்சில் கருணாநிதிக்கு ஒரு சமாதி உள்ளது. மேலும், தமிழக போக்குவரத்து துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு அதிமுக ஆட்சியில் நல்ல திட்டங்களையும் தீட்டினேன் ஆனால், திமுக ஆட்சியில் உள்ள தொழிலாளர்களுக்கு எந்த வித திட்டமும் இல்லை, திமுக வில் அங்கம் வகிக்கும் தொமுச, திமுக ஆட்சியில் இருந்தாலும் அங்கு தொமுச தட்டிக்கேட்கும் என்றார் தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகி சண்முகம், ஆனால், அன்று கூறிவிட்டு இன்று போக்குவரத்து தொழிலாளர்களுக்கு போராடாத தொ.மு.ச மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் வாயில் பேண்டேஜ் ஒட்டியுள்ளதா என்றும் வினா எழுப்பினார். அதே போல, தான் திமுக ஆட்சிக்கும், மின்சாரம் அடிக்கடி நிறுத்தத்திற்கும் நல்ல ராசி., அன்று திமுக ஆட்சி கவிழ்ந்தது என்றால் ஆற்காடு வீரசாமி அதனை அவரே ஒப்புக் கொண்டார். அதே போல் இன்று அதே துறையில் மின்சாரம் கட், அதே துறை அமைச்சர் செந்தில்பாலாஜியால் தான் இந்த திமுக ஆட்சி கவிழும் என்றார். இதுமட்டுமில்லாமல், ஆர்.கே.நகர் முதல் அரவக்குறிச்சி வரை டோக்கன் பார்ட்டி தான் ஆர்.கே.நகரில் அங்கு 20 ரூபாய் டோக்கன், அரவக்குறிச்சியில் ரூ 2 ஆயிரம் நோட்டு ஜெராக்ஸ் டோக்கன், அனைத்து திட்டங்களையும் தமிழக அளவில் கரூர் மாவட்ட மக்களுக்கு அமைச்சராக இருந்த போது பெற்றுத்தந்தவன் நான் (எம்.ஆர்.விஜயபாஸ்கர்), ஆனால் வெறும் ரூ 200 பொறுமானமுள்ள கொலுசு காட்டிவிட்டு மக்களை ஏமாற்றி விட்டு ஆட்சியில் அமர்ந்துள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியையும் சுட்டிக்காட்டிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்., கரூருக்கு வராத நிலையில், என்றோ ஒரு நாள் மட்டும் தான் கரூருக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி வருவதாகவும், மற்ற நாள் எல்லாம், கோவையில் தான் டேரா போட்டுள்ளதாகவும் தெரிவித்ததோடு, அனைத்திலும் ரோடு போடுவது முதல் டாஸ்மாக் பார் டெண்டர் வரை அனைத்திலும் அமமுக விலிருந்து உன்னோடு (செந்தில்பாலாஜி) திமுக வில் ஐக்கியமானவர்களுக்கு ஏ டீம், பி டீம் ஆகியோர்களுக்கு பிரித்து கொடுத்துள்ளதாகவும், உண்மையான திமுக வினர் என்று பந்து போல, திருப்பி அடிக்க உள்ளனர் அன்று தெரியும் திமுக வினரை பற்றி என்று கூறியதோடு, இன்றைய மே தின பொதுக்கூட்டத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய உறுதியேற்போம் என்றதோடு, வரக்கூடிய எம்.பி தேர்தலோடு, எம்.எல்.ஏ தேர்தல்களும் வரும் கண்டிப்பாக எடப்பாடி பழனிச்சாமி தான் முதல்வராக வருவார் என்றும் ஆகவே இன்றே சபதமேற்போம் என்று கூறி உரையை முடித்தார்.  முன்னதாக அதிமுக வில் இருந்த செந்தில்பாலாஜி, இன்றைய திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினை அட்டைக்கத்தி ஸ்டாலின் என்றும் எந்த நாட்டிற்கு போர் தொடுத்தார் என்று கூறி இன்று அவரை மட்டுமல்ல, அவரது மகனை கூட நேரில் பார்க்காமல் குனிந்த தலையுடன் பேசி வருவதையும், இதே திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அன்று கரூர் மாவட்டம், குளித்தலையில் இதே செந்தில்பாலாஜியை சாடிவிட்டு இன்று அதே ஸ்டாலின் புகழ்கின்றார் இதனை கரூர் மக்கள் மறக்க மாட்டார்கள் என்றார்.