1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Anandakumar
Last Updated : செவ்வாய், 29 மார்ச் 2022 (23:40 IST)

அமைச்சர் செந்தில்பாலாஜியின் சொந்த மாவட்டத்திலேயே மீண்டும் ஒரு பஞ்சாயத்தா ?

பொதுமக்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய கரூர் மாவட்ட பாஜக  தலைவர் வி.வி.செந்தில்நாதன்
 
 
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கா.பரமத்தி ஊராட்சி ஒன்றியம், நடந்தை ஊராட்சிக்குட்பட்ட, வேட்டையர் பாளையம் கிராமத்தில் தனியார் மின் உற்பத்தி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வரும் நிலையில், இப்பகுதியில் வசிக்கும் ஊர் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக ரோட்டுக்கு இருபுறமும் மின் கம்பங்களை நட்டு வருகின்றார்கள். ஊர் பொதுமக்கள் அனைவரின் எதிர்ப்பை மீறியும், காவல்துறையின் துணையோடு அந்த தனியார் மின் உற்பத்தி நிறுவனம் இந்த காரியங்களை செய்து வருவதாகவும், தினம் தினம் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், ஊர் பொதுமக்கள்  சார்பில் பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், இந்த தகவலை அறிந்த பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் வி.வி.செந்தில்நாதன்  உடனடியாக அந்த இடத்திற்கு சென்று ஊர் பொதுமக்களை சந்தித்தார். அப்போது, இந்த தனியார் மின்சார உற்பத்தி சோலார் தயாரிப்பு நிறுவனம் முழுக்க, முழுக்க மக்களை பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் ரோட்டின் இருபுறமும் மின்கம்பங்களை ஊன்றி அதன் மூலம் மின்சாரத்தினை எடுத்து செல்ல திட்டம் தீட்டி வருவதாகவும் பொதுமக்கள் தங்களது குறைகளை கூறினர். மேலும், பாஜக மாவட்டத்தலைவர் செந்தில்நாதன், மக்களின் அனைத்து குறைகளையும்  கேட்டறிந்தோடு, மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணமும், மரங்களை வெட்டாமலும், தனியார் மின் நிறுவனம் அவர்களது உற்பத்தி மின்சாரத்தினை கொண்டு செல்லும் வகையில் திட்டம் தீட்ட வேண்டும், அப்படி செய்யாவிட்டால், மாநிலத்தலைவர் அண்ணாமலை அவர்களது அனுமதி பெற்று மாபெரும் போராட்டத்தினை நட்த்த பாஜக தயார் என்றும் பாஜக மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தெரிவித்தார். மேலும், இந்நிகழ்ச்சியில்., பாஜக கட்சியின்  மாவட்ட துணைத் தலைவர் செல்வம். மாவட்ட செயலாளர் டைம்ஸ் சக்தி,  பரமத்தி தெற்கு ஒன்றிய செயலாளர் தங்கவேல், மாவட்ட விவசாய அணி செயலாளர் சக்திவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர். மேலும், கரூர் மாவட்ட பாஜக தலைவர் V.V.செந்தில்நாதன்,   கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி என்றும் உங்களுடன் துணை நிற்கும்  என்று அந்த கிராம மக்களுக்கு உறுதியளித்தார். இப்பிரச்சனையை தீர்ப்பதற்கு உரிய அதிகாரிகளிடம் தொடர்புகொண்டு பேசுவதாகவும்  கூறினார்.
 
மேலும், தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியின் சொந்த மாவட்டத்மான கரூர் மாவட்டத்திலேயே, தனியார் மின் உற்பத்தி நிறுவனத்தின் ஆதிக்கம் ஒன்று அதிகமாக ஈடுபட்டு வரும் நிலையில், தனது சொந்த மாவட்டத்தின் பிரச்சினையை சரிபார்க்காமல், மற்ற மாவட்டத்தின் மீது எப்படி மின்சாரம் சம்பந்தமான தனது சொந்த துறையின் பிரச்சினைகளை சமாளிப்பார் என்கின்றனர் சமூக நல ஆர்வலர்களும், நடுநிலையாளர்களும்