1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 19 பிப்ரவரி 2018 (16:48 IST)

வங்கி திறப்பு விழாவில் அமைச்சர் செல்லூர் ராஜூ செல்போன் திருட்டு: பெரும் பரபரப்பு

தமிழக அமைச்சர்களில் அவ்வப்போது பரபரப்பான பேச்சினால் தலைப்பு செய்திகளில் இடம்பெற்று வருபவர் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ. இவரது தெர்மோகோல் ஐடியா நெட்டிசன்களால் கலாய்க்கப்பட்டது தெரிந்ததே
 
இந்த நிலையில் இன்று அமைச்சர் செல்லூர் ராஜூ திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஜவ்வாதுமலை என்ற பகுதியில் கூட்டுறவு வங்கி ஒன்றின் திறப்புவிழாவில் கலந்து கொண்டார்.
 
விழா பரபரப்பில் அமைச்சர் செல்லூர் ராஜு இருந்தபோது திடீரென மர்மமனிதர் ஒருவர் அமைச்சரின் விலையுயர்ந்த செல்போனை திருடிவிட்டதாக தெரிகிறது. இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் போலீசார் செல்போன் திருடிய மர்மநபரை பிடிக்க வலைவீசி தேடி வருகின்றனர். வங்கி திறப்புவிழாவுக்கு வந்த அமைச்சரின் செல்போன் திருடுபோன விவகாரம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.