செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 16 மே 2022 (11:25 IST)

அன்னைத் தமிழில் அர்ச்சனை கட்டாயமில்லை..! – அமைச்சர் சேகர்பாபு!

தமிழக அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்திய “அன்னைத்தமிழில் அர்ச்சனை” கட்டாயமாக செய்ய வேண்டியதில்லை என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சியமைத்த நிலையில் அறநிலையத்துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த சில மாதங்கள் முன்னதாக “அன்னைத் தமிழில் அர்ச்சனை” என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

அதன்படி, முதற்கட்டமாக சில கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்பட்டது. ஆனால் அதற்கு பின்னர் தமிழில் அர்ச்சனை செய்யப்படுவதில்லை என்றும், பழையபடி சமஸ்கிருத மந்திரங்கள் ஓதப்படுவதாகவும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு “அனைத்துக் கோவில்களிலும் அன்னைத் தமிழில் அர்ச்சனை திட்டத்தை செயல்படுத்துவது கடினமான காரியம். முயற்சி செய்து வருகிறோம். அன்னைத்தமிழில் அர்ச்சனை என்பது கட்டாயமில்லை. விரும்புவோர் தமிழில் அர்ச்சனை செய்யலாம்” என விளக்கம் அளித்துள்ளார்.