செவ்வாய், 21 மார்ச் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified வியாழன், 1 செப்டம்பர் 2022 (19:30 IST)

தமிழகத்தில் போதைப்பொருட்கள் அதிகம் புழங்க குஜராத் தான் காரணம்: அமைச்சர் பொன்முடி

Ponmudi
தமிழகத்தில் போதைப் பொருட்கள் அதிகரிக்க குஜராத் தான் காரணம் என அமைச்சர் பொன்முடி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில் தான் அதிக அளவிலான போதைப்பொருள் கடத்தல் நடைபெறுகிறது என்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து ஈரான் வழியாக குஜராத் வழியாகத்தான் இந்தியாவுக்கு போதைப்பொருள்கள் கொண்டுவரப்படுகிறது என்றும் இதற்கு மத்திய அரசும் குஜராத் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 இந்தியாவிலேயே குஜராத்தில் அதிகமான போதை பொருட்கள் விற்பனை ஆகிறது என்றும் அங்கிருந்து தான் மற்ற மாநிலங்களுக்கு கடத்தப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
ஆப்கானிஸ்தானில் இருந்து ஈரான் வழியாக குஜராத்திற்கு போதைப்பொருள்கள் கடத்தப்படுவதை தடுக்க மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்
 
குஜராத்தில் போதைப்பொருள் அதிகமாக கிடைப்பதால் தான் தமிழகத்திலும் போதைப்பொருள்கள் கடத்தல் அதிகமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்