செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 19 ஜூலை 2023 (10:15 IST)

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் அமைச்சர் பொன்முடி சந்திப்பு: முக்கிய ஆலோசனை..!

தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று காலை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
அமைச்சர் பொன்முடி வீட்டில் நேற்று அமலாக்க துறையினர் அதிரடியாக சோதனை செய்தனர் என்பதும் அதன் பிறகு மாலை அவரிடம் விசாரணை செய்தனர் என்பதும் தெரிந்ததே. அமைச்சர் பொன்முடி  இடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 100 கேள்விகள் கேட்டதாகவும் இதனை அடுத்து அவர் வீடு திரும்பியதாகவும் கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை செய்து கொண்டிருந்த போது பெங்களூரில் எதிர்க்கட்சிகள் மாநாட்டில் கலந்து கொண்டிருந்த முதல்வர் முக ஸ்டாலின் இன்று சென்னை திரும்பியதை அடுத்து முதலமைச்சர் வீட்டில் அமைச்சர் பொன்முடி சந்தித்துள்ளார்
 
 இந்த சந்திப்பின்போது பொன்முடி வீட்டில் நட்ந்த சோதனை குறித்த தகவல்களை முதலமைச்சர் கேட்டு அறிந்து கொண்டதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran