வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 6 ஜூலை 2021 (12:14 IST)

ஒன்றரை டன் இனிப்பு: ராஜேந்திரபாலாஜி மீது எப்போது நடவடிக்கை? அமைச்சர் நாசர்

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஒன்றரை டன் இனிப்பு வழங்கப்பட்டதாக கடும் குற்றச்சாட்டு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது
 
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஒன்றரை டன் இனிப்பு வழங்கியது குறித்து அறிக்கை வந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை பால்வளத்துறை அமைச்சர் நாசர் அவர்கள் சற்றுமுன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒன்றரை டன் இனிப்பு இலவசமாக வழங்கியதாக வெளிவந்திருக்கும் செய்தி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தனிநபருக்கும் அவருடைய குடும்பத்திற்கும் ஒன்றரை டன் இனிப்பு எதற்காக என்றும் நெட்டிசன்கள் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்