1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 12 செப்டம்பர் 2022 (11:23 IST)

சிறுமி டான்யாவுக்கு படிப்பு செலவு; இலவச வீடு! – அமைச்சர் நாசர் அறிவிப்பு!

Danya
முகச்சிதைவு அறுவை சிகிச்சை முடிந்த சிறுமி டான்யாவின் கல்வி செலவை அரசே ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்துள்ள வீராபுரத்தை சேர்ந்த 9 வயது சிறுமி டான்யா அரியவகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு சிகிச்சை அளிக்க அரசு உதவ வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அச்சிறுமிக்கு தேவையான சிகிச்சைகளை மேற்கொள்ள வலியுறுத்தினார்.

அதன்படி தண்டலம் சவீதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் சிறுமி மற்றும் குடும்பத்தினரை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.


இன்று சிறுமி டான்யா பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். தான் பள்ளிக்கு செல்ல உள்ளது குறித்து சிறுமி டான்யா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அமைச்சர் ஆவடி நாசர், சிறுமி டான்யாவின் கல்வி செலவை அரசே ஏற்கும் என்றும், சிறுமியின் குடும்பத்திற்கு அரசு சார்பில் இலவச வீடு வழங்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.