வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 8 ஆகஸ்ட் 2023 (14:46 IST)

சென்னையில் வீராவேசம்.. டெல்லியில் கைகட்டி நிற்பது.. அன்புமணி குறித்து அமைச்சர் விமர்சனம்..!

சென்னையில் வீராவேசமாக பேசும் அன்புமணி டெல்லி சென்றதும் கைகட்டி நிற்பது ஏன் என  அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் சொல்லும் கேள்வி எழுப்பி உள்ளார்.  
 
போராட்டம் என்ற பெயரில் போலீசார் மீது கல்வீசி மக்களை தூண்டி விட்டு உள்ளார் அன்புமணி என்றும் என்.எல்.சி விரிவாக்க  திட்டத்தை கைவிடும் எண்ணம் இல்லை என மத்திய அரசு கூறியுள்ள நிலையில் டெல்லி அளவில் மட்டுமே பாஜக கூட்டணியில் இருக்கிறோம் என கூறும் அன்புமணி கூட்டணியை விட்டு வெளியேறாதது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
 சென்னையில் வீராவேசமாக பேசும் அன்புமணி டெல்லியில் கைகட்டி நிற்பது ஏன் என்பதற்கு அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார். அமைச்சரின் இந்த கேள்விக்கு அன்புமணி என்ன பதில் தரப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Mahendran