புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 12 நவம்பர் 2023 (13:01 IST)

அமைச்சரின் குடும்பம் தாக்குதல், கோயில்களில் பெட்ரோல் குண்டு.. அமைச்சர் எல்.முருகன் பேட்டி..!

L Murugan
அமைச்சரின் குடும்பத்தினரே தாக்கப்படுவதும், கோயில்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் சம்பவங்களுமே தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு எந்த நிலையில் இருப்பதற்கு எடுத்துக்காட்டு என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேட்டி அளித்துள்ளார். இந்த பேட்டியில் மேலும் அவர் கூறியதாவது:
 
சென்னை போன்ற மாநகரங்களிலேயே மருத்துவர்கள் இல்லை, 108 ஆம்புலன்ஸ் சேவை எளிதில் கிடைக்கவில்லை என்றால், ஊட்டி, கூடலூர் போன்ற பகுதிகளுக்கும், நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களுக்கும் எப்படி கிடைக்கும்?
 
தமிழ்நாட்டின் சுகாதார கட்டமைப்பினுடைய மிகப்பெரிய அவலம் நேற்று சென்னையில் நடைபெற்ற சம்பவம்
 
தீபாவளி பண்டிகைக்கு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் வாழ்த்து சொல்ல வேண்டும்; தேவாலயங்களுக்கும், மசூதிக்கும் செல்ல தெரிந்த முதலமைச்சருக்கு ஏன் தீபாவளிக்கு வாழ்த்து சொல்ல முடியவில்லை?” இவ்வாறு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேட்டியில் கூறியுள்ளார்.
 
Edited by Siva