1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 22 ஆகஸ்ட் 2020 (14:44 IST)

எல்லாம் ஓடிடிக்கு போயிடும் போல; தியேட்டர் திறப்பு எப்போ? – அமைச்சர் விளக்கம்!

சூரரை போற்று திரைப்படம் ஓடிடியில் வெளியாவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்படுவது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் சூர்யா நடித்து, சுதா கொங்கரா இயக்கத்தில் தயாரான ‘சூரரை போற்று’ திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியிடப்படுவதாக நடிகர் சூர்யா அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இந்நிலையில் மேலும் சில பெரிய ஹீரோ படங்களும் ஓடிடிக்கு விற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் திரையரங்குகள் விரைவில் திறக்கப்பட்டால் மட்டுமே பெரிய படங்கள் நழுவுவதை நிறுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் திரையரங்குகளை திறப்பது குறித்து பேசியுள்ள அமைச்சர் கடம்பூர் ராஜூ செப்டம்பர் 1ம் தேதி மத்திய அரசு திரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளதாகவும், அதை தொடர்ந்து தமிழகத்தில் திரையரங்குகள் திறப்பது மற்றும் அதற்கான விதிமுறைகள் வெளியிட வாய்ப்பிருப்பதாகவும் கூறியுள்ளார்.