புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 2 மார்ச் 2018 (18:00 IST)

டிடிவி தினகரனுக்கு கேமரா முன் நிற்பதே ஃபேஷனாகிவிட்டது; அமைச்சர் ஜெயக்குமார்

டிடிவி தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல் மற்றும் தங்கத்தமிழ் செல்வன் ஆகியோர் வழக்கு பதிவு செய்யப்பட்டது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் தினகரன் சொத்து குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

 
தினகரன் ஆதரவாளர்களான தங்கத்தமிழ்ச்செல்வன் மற்றும் வெற்றிவேல் ஆகிய இருவரும் நேற்று தலைமை செயலகத்தில் போலீசாரின் அனுமதியின்றி அத்துமீறி உள்ளே நுழைந்ததாக அவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 
நேற்று தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த வெற்றிவேல் மற்றும் தங்கத்தமிழ் செல்வன், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது ஊழல் குற்றாச்சாட்டுகளை அடுக்கினர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம் இதுகுறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் கூறியதாவது:-
 
டிடிவி தினகரன் கேமரா முன் நிற்பதே ஃபேஷனாகி விட்டது. ஊழல் புகார் சொல்பவர்கள் நேரடியாக வந்து சொல்ல வேண்டியதுதானே? வெற்றிவேல், தங்கத்தமிழ் செல்வன் ஆகியோரை மாட்டிவிடுவதா? யாரையாவது மாட்டிவிடுவதே டிடிவி தினகரனுக்கு வேலையாகிவிட்டது. 
 
இவ்வளவு பேசும் தினகரனுக்கு ரூ.10 கோடி சொத்து வந்தது எப்படி என்று சொல்ல முடியுமா என கேள்வி எழுப்பினார்.