சென்னை ராயபுரத்தில் ஆட்டோ ஓட்டினார் அமைச்சர் ஜெயக்குமார்
சென்னை ராயபுரத்தில் ஆட்டோ ஓட்டினார் அமைச்சர் ஜெயக்குமார்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனோ வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்று தமிழகத்தில் 646 பேர்களும் அதில் 509 பேர்கள் சென்னையிலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர். தமிழகத்தில் குறிப்பாக தலைநகர் சென்னையில் தினந்தோறும் 500க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருவதால் தமிழக அரசு சீரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் சென்னை மாநகராட்சியும் பல்வேறு விதமான நடவடிக்கை எடுத்து சென்னை மக்களை கொரோன வைரஸிடம் இருந்து காப்பாற்ற போராடி வருகிறது
இந்த நிலையில் கொரோனா வைரஸிடம் இருந்து மக்களை பாதுகாக்க கபசுரக் குடிநீர் வழங்கும் திட்டம் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இதை குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பதால் இதனை அனைவரும் குடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
இந்த நிலையில் கபசுரக் குடிநீர் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சென்னை ராயபுரம் தொகுதி எம்எல்ஏவும், மீன்வளத் துறை அமைச்சருமான ஜெயக்குமார் அவர்கள் இன்று ராயபுரம் பகுதியில் ஆட்டோ ஓட்டி அதில் கபசுரக் குடிநீரை பொது மக்களுக்கு வழங்குவதை தொடங்கி வைத்தார். அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் ஆட்டோ ஓட்டும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது