புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 17 டிசம்பர் 2018 (08:26 IST)

விழா மேடையில் தூங்கிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்: வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விழா மேடையில் தூங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அவ்வப்போது பரபரப்பான கருத்தை கூறி சிக்குவதில் முக்கிய பங்கு வகிப்பவர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். சமீபத்தில் கூட ஒரு சர்ச்சையான கருத்தை கூறினார்.
 
இந்நிலையில் பழனியில் பல்பொருள் அங்காடி திறப்பு விழாவில் பங்கேற்ற அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தூக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறினார். இதுமட்டுமில்லாமல் விழாவில் பங்கேற்ற ஆட்சியர் வினய்யும் தூக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் தூங்கி வழிந்தார்.

பணிச்சுமையின் காரணமாகவே இவர்கள் அயர்ந்து தூங்கியதாக கூறப்படுகிறது. எனினும் இவர்கள் தூங்கியதால் அங்கிருந்த மக்கள் அதிருப்தியை தெரிவித்தனர்.