புதன், 25 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 25 செப்டம்பர் 2024 (12:06 IST)

காலாண்டு தேர்வு விடுமுறை நீட்டிக்கப்படுகிறதா? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

Anbil Magesh
இந்த ஆண்டு காலாண்டு தேர்வு விடுமுறை மிகவும் குறுகிய காலமாக இருப்பதால் அதை நீடிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் இது குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பள்ளிகளுக்கு வழக்கமாக காலாண்டு தேர்வு விடுமுறைகள் ஒன்பது நாட்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு மிகவும் குறைவாக காலாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை நீடிப்பு குறித்து முதன்மை செயலாளரிடம் ஆலோசனை செய்து, அதன் பின் அறிவிப்பு வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் காலாண்டு தேர்வு விடுமுறை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த ஆண்டு காலாண்டு தேர்வு விடுமுறை ஐந்து நாட்கள் மட்டுமே உள்ளது.

செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை காலாண்டு தேர்வு விடுமுறையாக உள்ளது. . இதில், செப்டம்பர் 29 ஞாயிறு என்பதும், அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி விடுமுறை நாளாக இருப்பதாலும், செப்டம்பர் 28, 30, அக்டோபர் 1 ஆகிய 3 நாட்களே உண்மையான காலாண்டு தேர்வு விடுமுறையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Siva