1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai metrological center says about rain

இன்றிரவு சென்னை உள்பட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை அறிவிப்பு..!

Chennai Rain
இன்று இரவு சென்னை உள்பட ஏழு மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாகவே மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டின் காரணமாக மாலை மற்றும் இரவு நேரங்களில் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது என்பதைக் காண்கிறோம்.

பகல் நேரத்தில் கடுமையான வெப்பமும், மாலை மற்றும் இரவு நேரங்களில் மழையுடனும் மாறி மாறி தட்பவெப்ப நிலை காணப்படுகிறது. இன்று இரவு சென்னை உள்பட ஏழு மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, திருப்பூர், தேனி ஆகிய ஏழு மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, மேற்கண்ட ஏழு மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்நிலையில், தற்போது சென்னையில் சில இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது."

Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து.. வழக்கை முடித்து வைத்தது சுப்ரீம் கோர்ட்..!