வியாழன், 3 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 5 செப்டம்பர் 2024 (08:15 IST)

இந்த ஆண்டு மிலாது நபி தினம் இதுதான்: தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவிப்பு..!

ஒவ்வொரு ஆண்டும் மிலாது நபி தினம் இஸ்லாமிய பெருமக்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு மிலாது நபி தினம் எது என்பது குறித்து தமிழக அரசின் தலைமை காஜி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இந்த ஆண்டு மிலாது நபி செப்டம்பர் 17ஆம் தேதி கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இஸ்லாமிய பண்டிகைகள் அனைத்தும் பிறை தெரிவதன் அடிப்படையில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் கடந்த ஆண்டு மிலாடி நபிக்கான பிறை செப்டம்பர் 27 ம் தேதி மாலை தெரிந்தது. எனவே செப்டம்பர் 28 ம் தேதி மிலாது நபி கொண்டாடப்பட்டது.  

இந்த நிலையில் இந்த ஆண்டு பிறை தெரியவில்லை. நேற்று அதாவது செப்டம்பர் 4ஆம் தேதி அன்று மாலை ரபிஉல் அவ்வல் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் காணப்படவில்லை. எனவே வெள்ளிக்கிழமை ஆங்கில மாதம் 06-09-2024 தேதி அன்று ரபிஉல் அவ்வல் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருப்பதாகவும், எனவே மிலாதுன் நபி செப்டம்பர் 17ஆம் தேதி கொண்டாடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Edited by Siva