வெள்ளி, 4 அக்டோபர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: புதன், 4 செப்டம்பர் 2024 (22:50 IST)

நாளை ‘கோட்’ ரிலீஸ்.. இன்றிரவு முதலே விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..!

தளபதி விஜய் நடித்த ‘கோட்’ திரைப்படம் இன்னும் ஒரு சில மணி நேரங்களில் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் ரிலீஸ் ஆகயிருக்கும் நிலையில் இன்றிரவே விஜய் ரசிகர்கள் ‘கோட்’ படத்தின் ரிலீஸ் விழாவை கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்.திரையரங்கு வாசலில் விஜய் ரசிகர்கள் இப்போதே கூடி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் விஜய் ரசிகர்களுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது. விஜய் ரசிகர்கள் நாளை திரையரங்கிற்கு வரும்போது திரையரங்கிற்கு எந்தவித சேதாரமும் ஏற்படுத்தாமல் நல்ல முறையில் படத்தை பார்த்து கொண்டாடிவிட்டு செல்ல வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
 
மேலும்  பல தனியார் தொலைக்காட்சிகள் இன்று இரவு முதலே கோட் படத்தின் கொண்டாட்டத்தை நேரலையில் ஒளிபரப்பி வருவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva