சென்னையில் இருந்து 190 கிமீ தூரத்தில் மிக்ஜாம் புயல்… 9 கிமீ வேகத்தில் நகர்வு!
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் நேற்று நள்ளிரவு முதல் சென்னையில் கோரத்தாண்டவம் ஆடியுள்ளது. இதனால் சென்னை முழுவதும் வெள்ள நீரில் மூழ்கி இயல்பு வாழ்க்கையை இழந்துள்ளது. பல இடங்களில் குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீர் புகுந்து மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றன.
இந்நிலையில் சென்னையில் மையம் கொண்டிருந்த மிக்ஜாம் புயல் மெதுவாக நகர்ந்து இப்போது ஆந்திராவின் நெல்லூருக்கு தென் கிழக்கே 30 கிமீ தொலைவிலும், பாபட்லாவில் இருந்து தெற்கே 130 கிமீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரமாக இந்த புயல் மணிக்கு 9 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.
மிக்ஜாம் புயல் இப்போது கரையைக் கடக்க தொடங்கியுள்ளது. புயல் முழுமையாக கரையைக் கடக்க இன்று முற்பகல் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையைக் கடக்கும் போது 90 முதல் 110 கி மீ வரை காற்று வேகமாக வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.