திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 4 டிசம்பர் 2023 (21:33 IST)

நாளையும் ரயில் சேவைகள் ரத்து- ரயில்வேதுறை அறிவிப்பு

south railway
சென்னையில் இருந்து 120 கிமீ  வடக்கு திசையில் மிக்ஜாம் புயல்  விலகிச் சென்றதாகவும் இன்று நள்ளிரவுக்குப் பின் மழை படிப்படியாக குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் அரசுடன் இணைந்து தன்னார்வ தொண்டு நிறுவனங்களும்  மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.

சென்னையில், உள்ள சில பள்ளிவாசல்கள், திருமண மண்டபங்கள், லயோலா கல்லூரி, உள்ளிட்ட இடங்களில் மழையால் பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இன்று புயல் பாதிப்பால் விமானம் மற்றும் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், மிக்ஜாம் புயலால் சென்னையில் நாளையும் புறநகர் மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வேதுறை அறிவித்துள்ளது.