1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 31 டிசம்பர் 2024 (09:08 IST)

சென்னையில் ரூ.16 கோடி மதிப்புள்ள மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல்! 5 பேர் கைது!

சென்னையில் உள்ள மாதவரத்தில் ரூ.16 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சென்னை பகுதிகளில் கடந்த சில காலமாக போதைப்பொருள் கடத்தல் அதிகரித்து வரும் நிலையில் காவல்துறை பலரை கைது செய்து வருகிறது. கடந்த வாரம் மியான்மரில் இருந்து மணிப்பூர் வழியாக சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1.5 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பிடிப்பட்ட நிலையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 

அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் சென்னை மாதவரம் பகுதியில் மெத்தபெட்டமைன் என்ற போதை பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீஸார் ரூ.16 கோடி மதிப்புடைய 16 கிலோ மெத்தபெட்டமைன் போதை பொருளை பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இதுவரை தமிழ்நாட்டில் பிடிபட்ட மெத்தபெட்டமைன் போதை பொருட்களில் இதுவே அதிக அளவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Edit by Prasanth.K