சீனாவில் வேகமாக பரவும் வைரஸ்.. கேரளாவில் தீவிர கண்காணிப்பு..!
சீனாவில் எச்.எம்.பி.வி என்ற வைரஸ் மிக வேகமாக பரவி வருவதால் சமூக ஊடகங்கள் மற்றும் ஊடகங்களில் பரபரப்பாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் இந்த வைரஸ் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்று சீனாவின் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் வெளிநாட்டில் அதிக அளவில் வசிக்கும் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இந்த வைரஸ் பரவி விடும் என்று அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தனது சமூக வலைத்தளத்தில் சீனாவில் கண்டறியப்பட்ட வைரஸ் தொற்று நோயாக மாறக்கூடியது இல்லை என்றும் வேகமாக பரவக்கூடியது என்ற தகவல் உண்மை இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
உலகில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கேரளாவை சேர்ந்தவர்கள் இருப்பதால் சீனா உள்பட வெளிநாட்டவர் அடிக்கடி மாநிலத்திற்கு வருவதால் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் இந்த விவகாரத்தில் நிலைமையை கண்காணித்து வருகிறோம் என்றும் தெரிவித்தார்.
மேலும் கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், முதியோர் ஆகியோர் விழிப்புணர்ச்சியுடன் இருக்க வேண்டும் என்றும் வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.
Edited by Siva