செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By mahendran
Last Modified: திங்கள், 20 செப்டம்பர் 2021 (11:37 IST)

கண்ணீர் அஞ்சலியில் இருந்த சர்ச்சை வாசகம்… கொலை மிரட்டல் விடுத்த ஐவர் கைது!

திருச்சி பொன்மலைப் பட்டியில் கொலை செய்யப்பட்ட ஒருவருக்கு நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

திருச்சியைச் சேர்ந்த சின்ராஜ் என்பவர் சில தினங்களுக்கு முன்னர் கடைத்தெருவில் வைத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதையடுத்து அவரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அவருக்குக் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.

அதில் கொலைக்குப் பழிவாங்கும் விதமாக ‘விரைவில்’ என்ற வாசகம் இருந்துள்ளது. இது சம்மந்தமாக சார்லஸ் என்பவர் ஆட்சேபம் தெரிவிக்க அவரை சின்ராஜின் உறவினர்கள் ஐந்து பேர் சேர்ந்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து போலிஸில் புகார் அளிக்க அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.