வைகோவுடன் செல்பி எடுக்க 100 ரூபாய் கட்டணம்: ம.தி.மு.க
ம.தி.மு.க பொதுசெயலாளர் வைகோ நடந்துமுடிந்த மக்களவை தேர்தலில் தி.மு.கவோடு கூட்டணி அமைத்து போட்டியிட்டார்.
மாநிலங்களவை எம்.பிக்களுக்கான தேர்வில் தி.மு.கவால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர் வைகோ. வைகோவை “பாராளுமன்ற புலி” என்று வர்ணிப்பார்கள். தற்போது மாநிலங்களவையில் தமிழக பிரச்சினைகள், தேசிய பிரச்சினைகளுக்காக தீவிரமாக குரல்கொடுத்து வருகிறார் வைகோ.
தற்போது வைகோ செல்லும் இடமெல்லாம் அவருடன் செல்பி எடுத்து கொள்ள பலர் ஆர்வம் காட்டுகின்றனர். அதுபோல பலரும் அவருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்ய விரும்புகிறார்கள். இந்நிலையில் ம.தி.மு.க வெளியிட்டுள்ள அறிவிப்பில், வைகோவுக்கு சால்வை அணிய விரும்புபவர்கள் அதற்கு பதிலாக கட்சிக்கு நிதி அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். மேலும் வைகோவுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்புபவர்கள் 100ரூ கட்டணம் செலுத்தி போட்டோ எடுத்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.