திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 2 நவம்பர் 2021 (11:11 IST)

பள்ளிக்கு வந்த பின்னர் விடுமுறை அறிவிப்பு: மாணவர்கள் அதிருப்தி!

கனமழை காரணமாக இன்று சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள ஒரு சில மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மாணவர்கள் பள்ளிக்கு வந்த பின்னர் விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
நேற்று இரவு முதல் தமிழகத்தில் உள்ள ஒரு சில மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதையடுத்து இன்று காலையே சென்னை உள்பட 7 மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் இன்று காலை 8 மணிக்கு மேல் மாணவர்கள் பள்ளிக்கு வர தொடங்கிய பிறகு விடுமுறை என மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
நேற்று இரவு முதல் மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் நேற்று இரவோ அல்லது இன்று அதிகாலையிலேயே இந்த அறிவிப்பு வெளியிட்டு இருந்தால் மாணவர்கள் மழையில் நினைந்து பள்ளிக்கு வர வேண்டிய அவசியம் இருக்காது என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது