மழைக்காலங்களில் சருமம் ஆரோக்கியமாக இருப்பதற்கான சில அழகு குறிப்புக்கள் !!
மழைக்காலங்களில் சருமம் ஆரோக்கியமாக இருப்பதற்கும், இயற்கையான பொருட்களைப் பயன்படுத்தி செய்யக்கூடிய எளிமையான அழகு குறிப்புக்களை பார்ப்போம்.
முகம் பொலிவு பெறுவதற்கு, சந்தனத் தூள்1 தேக்கரண்டி, ரோஜா, பன்னீர் 2 தேக்கரண்டி, கஸ்தூரி மஞ்சள் தூள் அரை தேக்கரண்டி போன்றவற்றை எடுத்துக்கொண்டு நன்றாகக் கலக்கவும். இதை முகத்தில் தடவி 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த தண்ணீரில் கழுவவும்.
ஈரப்பதத்தை தக்க வைப்பதற்கு, ஓட்ஸ் 2 தேக்கரண்டி, ஒரு முட்டையின் வெள்ளைக்கரு, தேன் 1 தேக்கரண்டி, தயிர் 2 தேக்கரண்டி இவை அனைத்தையும் நன்றாகக் கலந்து 20 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்பு முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.
மிருதுவான சருமத்திற்கு, ஸ்ட்ராபெர்ரி பழம் 2 (அரைத்தது), முல்தானிமெட்டி 2 தேக்கரண்டி, ரோஜா பன்னீர் 3 தேக்கரண்டி எடுத்துக்கொண்டு மூன்றையும் நன்றாகக் கலந்து முகத்தில் தடவவும். 15 நிமிடங்களுக்குப் பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும்.