திமுக ஆட்சியைக் கலைப்பதுதான் சரி… மாரிதாஸின் டிவிட்டுக்கு திமுக எம்பி சவால்!
கிஷோர் கே சுவாமி கைது செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு ஆதரவாக மற்றொரு யுடியுப் பிரபலம் மாரிதாஸ் குரல் கொடுத்துள்ளார்.
பல்வேறு வழக்குகளின் கீழ் கிஷோர் கே சுவாமி கைது செய்யப்பட்டு ஜூன் 28 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு ஆதரவாக மாரிதாஸ் தன்னுடைய டிவீட்டில் திமுக நிர்வாகிகள் பேசாத பேச்சா போடாத பதிவா! ஆட்சி நிர்வாகத்தை ஒழுங்கா செய்யத் திறமை இல்லை, கேட்கும் கேள்விகளுக்குப் பதில் இல்லை! ஆக வழக்கமான அடக்குமுறை அரசியலில் திமுக ஸ்டாலின் அவர்கள் இறங்கியுள்ளார். சட்டத்தை தன் பழிவாங்கும் அரசியலுக்கு வளைக்கும் இந்த ஆட்சியை கலைப்பது தான் சரி. எனக் கூறியிருந்தார்.
இதனால் திமுகவினர் பலரும் கடுப்பாகினர். அதில் ஒருவரான திமுக எம்பி செந்தில்குமார் தைரியம் இருந்தா கை வைச்சு பாரு... நீங்க எல்லாம் யாரு நீங்க சொல்லிட்டா மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கலைத்துவிடுவர்களா செம காமெடி. நிறைய வேலை இருக்கு. அவங்க வரும்வரை நேரத்தை பயன் உள்ளதாக செலவழிக்கவும். பி கு: உள்ளே போகும் போது மறக்காம போர்டை எடுத்துட்டு போகவும் எனக் கூறி சவால் விட்டுள்ளார்.