செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 10 ஏப்ரல் 2024 (07:33 IST)

எனது பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி தான், ஆனால் திமுக எனது எதிரி: மன்சூர் அலிகான்..!

mansoor alikhan
எங்கள் கட்சியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி தான் ஆனால் அதே நேரத்தில் திமுக எங்கள் எதிரி என நடிகர் மன்சூர் அலிகான் பிரச்சாரம் செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் இந்திய ஜனநாயக புலிகள் என்ற அமைப்பை தொடங்கிய நிலையில் தற்போது அவர் வேலூர் தொகுதியில் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறார். அவர் தனது பிரச்சாரத்தை வித்தியாசமாக செய்து வரும் நிலையில் எனது கட்சியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி தான் என்று கூறியதோடு திமுக எனக்கு எதிரியை அவர்களை சும்மா விடமாட்டேன் என்றும் கூறி வருகிறார்

மேலும் வேலூரில் தற்போது 100 டிகிரிக்கும் அதிகமாக வெயிலடிக்கும் நிலையில் நான் எம்பியாக தேர்வு செய்யப்பட்டால் வேலூரை ஊட்டி மாதிரி குளு குளு என ஆக்குவேன் என்றும் சிரிக்காமல் பேசி வருகிறார்

மேலும் வேலூரில் இருக்கும் காடு மலைகள் எல்லாம் அழிக்கப்பட்டு வருகிறது என்றும் நான் வந்தால் அவற்றை பாதுகாப்பேன் என்றும் பேசினார். அது மட்டும் இன்றி தனது மகனையும் அவர் பிரச்சாரத்திற்கு கூட்டி சென்று கொண்டிருக்கும் நிலையில் ’இவன்தான் நான் பெத்த பையன், சோத்தை தின்னுட்டு வீட்டில் இருந்தான், அவனை பிரச்சாரம் செய் என்று சொல்லி கூட்டிட்டு வந்து விட்டேன் என்றும் கூறி கலகலப்பை ஏற்படுத்தி உள்ளார்

மொத்தத்தில் அவரது பிரச்சாரம் காமெடியாக இருப்பதாக மக்கள் கருத்து கூறி வருகின்றனர்.

Edited by Siva