வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 7 ஏப்ரல் 2019 (19:52 IST)

மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி:

சீமானின் நாம் தமிழர் கட்சியின் திண்டுக்கல் தொகுதி வேட்பாளரான நடிகர் மன்சூர் அலிகான் கடந்த சில நாட்களாக நூதன முறையில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.  காய்கறி விற்பது, புரோட்டா மாஸ்டர் ஆவது என மக்களை கவரும் வகையில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த மன்சூர் அலிகானுக்கு இன்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது
 
தேர்தல் பரப்புரையின் போது ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக திண்டுக்கல் நாம் தமிழர் வேட்பாளர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
மன்சூர் அலிகானுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட போதிலும் நாம் தமிழர் கட்சியினர் வேட்பாளர் இல்லாமலேயே களத்தில் பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது