திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 6 ஏப்ரல் 2024 (11:02 IST)

ராகுல்காந்தி பிரதமரானால் 24 மாதங்களில் மதுரை எய்ம்ஸ்: விருதுநகர் தொகுதி மாணிக்கம் தாகூர்

Manickam Tagore
ராகுல் காந்தி பிரதமராக பதவி ஏற்றால் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடுத்த 24 மாதங்களில் திறக்கப்படும் என்று விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். 
 
விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் ராதிகா மற்றும் விஜய பிரபாகரன் ஆகிய இருவரும் நட்சத்திர வேட்பாளர்கள் என்று சொல்ல முடியாது என்றும் அவர்கள் இருவரும் சினிமா துறையை சேர்ந்தவர்கள் என்று வேண்டுமென்றால் சொல்லலாம் என்றும் அவர் கூறினார்.  சினிமாவை பொருத்தவரை மக்கள் பார்ப்பார்கள், ரசிப்பார்கள்,ஆனால் அவர்களுக்கு ஓட்டு போட மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார். 
 
விருதுநகர் தொகுதியை பொருத்தவரை பல நலத்திட்டங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விருதுநகர் தொகுதிக்கு மேலும் பல நலத்திட்டங்கள் கொண்டுவரப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தார். 
 
மேலும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை பொருத்தவரை ராகுல் காந்தி பிரதமர் ஆனால் அடுத்த 24 மணி நேரங்களில் திறக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார். விருதுநகர் தொகுதியில் பாஜக சார்பில் ராதிகா சரத்குமார், தேமுதிக சார்பில் விஜய பிரபாகரன் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Mahendran