பச்சோந்திகளை பத்தி விட்டுட்டு, சசிகலா அதிமுகவை பிடிப்பார்! – நமது எம்ஜிஆர் நாளேடு விமர்சனம்!
சசிக்கலா அதிமுகவில் இணைவது குறித்து சமீபத்தில் முதல்வர் கருத்து தெரிவித்த நிலையில் அதை மறைமுகமாக விமர்சிக்கும் விதமாக நமது எம்ஜிஆர் நாளேடு கட்டுரை வெளியிட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா விடுதலையாகிவிட்ட நிலையில் கொரோனா காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் சசிக்கலா மீண்டும் அதிமுகவில் இணைத்துக் கொள்ளப்படுவாரா? அதிமுக – அமமுக ஒன்றிணையுமா? போன்ற கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளன.
இந்நிலையில் இதுகுறித்து சமீபத்தில் கருத்து தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி “சசிக்கலாவை அதிமுகவில் இணைத்துக் கொள்ள 100 சதவீதம் வாய்ப்பில்லை” என தெரிவித்திருந்தார். இந்நிலையில் இதற்கு மறைமுகமான விமர்சன கட்டுரை வெளியிட்டுள்ள அமமுகவின் அதிகாரப்புர்வ நாளேடான நமது எம்ஜிஆர், பதவிக்காக பச்சோந்தியாய் நடந்து கொண்டவர்களை விரட்டியடித்து அதிமுகவை சசிக்கலா மீண்டும் மீட்பார் என்றும், பதவிக்காக பச்சோந்தியாய் நடந்து கொண்டவர்களுக்கு நாவடக்கம் தேவை என்றும் மறைமுகமாக விமர்சித்துள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.