செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 30 ஜனவரி 2021 (08:37 IST)

காளான் பிரியாணி சூப்பர்.. அடுத்த தடவை ஈசல் சமைச்சு தாங்க! – தமிழக கிராமத்தில் ராகுல் காந்தி

தமிழகத்திற்கு அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி கிராமம் ஒன்றில் சமையல் கலைஞர்களோடு உணவருந்தியது வைரலாகி வருகிறது.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த சில சமையல் கலைஞர்கள் இணைந்து சமையலுக்கான யூட்யூப் சேனல் ஒன்றை நடத்தி வருகின்றனர். அசைவ உணவு பொருட்களை பெருமளவில் சமைக்கும் அவர்கள் அதை அருகிலுள்ள முதியோர், ஆதரவற்றோர் காப்பகத்திற்கு வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகம் வந்த ராகுல்காந்தி அந்த கிராமத்திற்கு சென்று அந்த சமையல் கலைஞர்களை சந்தித்துள்ளார். ராகுல் காந்திக்காக பிரத்யேகமாக அவர்கள் தயாரித்த காளான் பிரியாணியை ஓலைப்பாயில் அமர்ந்து சகஜமாக சாப்பிட்ட ராகுல் காந்தி, காளான் பிரியாணி சுவையாக இருப்பதாகவும், அடுத்த முறை தான் வரும் போது ஈசல் செய்து தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.