திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 30 ஜனவரி 2021 (08:40 IST)

யானைக்கு தீவைத்த கொன்ற விவகாரம்… 55 ரிசார்ட்டுகளை மூட உத்தரவு!

நீலகிரி மாவட்டத்தில் காயத்தோடு சுற்றித்திரிந்த யானையை டயரில் தீ வைத்துக் கொளுத்தி கொன்ற விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

நீலகிரி மாவட்டம் மாவநல்லா பகுதியில் ஊர்ப்பகுதிக்குள் வந்த காட்டு யானை மீது ஆசாமிகள் சிலர் தீ வைக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யானையை விரட்ட டயரில் தீ வைத்து யானை மீது வீசியதாக கூறப்படுகிறது. இதனால் டயர் உருகி யானை மீது ஒட்டிக்கொண்டதால் யானைக்கு அதிகமான தீக்காயங்கள் ஏற்பட்டு இறந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த கொடூர சம்பவத்திற்கு பலர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இப்போது மசினக்குடி ஊராட்சி நிர்வாகம் அந்த பகுதியில் குடியிருப்புகள் என அனுமதி வாங்கி ரிசார்ட்டுகளாக நடத்தப்பட்டு வந்த தனியார் ரிசார்ட்டுகளை உடனடியாக மூட நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த உத்தரவின் பேரில் 55 ரிசார்ட்கள் வரை மூடப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.