1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 13 மே 2021 (11:15 IST)

லாக்டவுன் அறிவித்து மூன்றாவது நாளிலிலேயே கள்ளச்சாராயம் காய்ச்சிய நபர் !

தமிழகத்தில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆங்காங்கே பதுக்கி வைக்கப்பட்ட மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் விநாயகமூர்த்தி என்பவர் வீட்டிலேயே கள்ளச்சாராயம் காய்ச்சி உள்ளார். அம்மாவட்டத்தின் வீரபாண்டியன்பட்டினம், வேளாங்கண்ணி கோயில் தெருவில் உள்ள விநாயகமூர்த்தியின் வீட்டில் சோதனை நடத்திய போது, 35 லிட்டர் கள்ளச்சாராயம், 60 லிட்டர் ஊரல் ஆகியவை கண்டெடுக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதுபோல ஆங்காங்கே நடக்கும் சோதனைகளில் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கும் மது பாட்டில்களும் ஆயிரக்கணக்கில் கைப்பற்ற படுகின்றன.