திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 25 ஜனவரி 2020 (08:53 IST)

வளர்ப்புத் தாயை கைவிட்ட மகன் : கழிவறையில் தங்க வைத்த கொடூரம் !

தனது வளர்ப்புத் தாய் ஒருவரை ஒழுங்காக பராமரிக்காமல் பாழடைந்த கழிவறையில் தங்கவைத்த நபரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் நிகோலஸ். இவரின் வளர்ப்புத் தாய் நிகோலஸின் பராமரிப்பில் வாழ்ந்து வந்துள்ளார். மேலும் அவர் நிகோலஸின் தாயின் சகோதரியும் ஆவார். அவருக்கு தற்போது 92 வயது ஆகிறது. இந்நிலையில் மூதாட்டியை ஒழுங்காக பராமரிக்காமல் இருவரும் கொடுமைப் படுத்தியுள்ளனர். அவருக்கு தங்குவதற்கு சுகாதாரமான இருப்பிடம் அமைத்துக் கொடுக்காமல் தங்கள் வீட்டில் உள்ள பாழடைந்த பயன்படுத்தாத கழிவறையில் அவரைத் தங்க வைத்துள்ளனர் நிகோலஸும் அவரது மனைவியும். இந்த ஜனவரி மாத குளிரிலும் அவர் கழிவறையிலேயெ தங்கியுள்ளார்.

இந்த சம்பவம் பற்றி மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷுக்கு தகவல் செல்ல,  அந்த மூதாட்டியை மீட்டு கருணை இல்லத்தில் சேர்க்க ஏற்பாடு செய்துள்ளார். மேலும் வயதானத் தாயை ஒழுங்காகப் பராமரிக்காத நிகோலஸ் மற்றும அவரது மனைவியைக் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.