திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 28 ஆகஸ்ட் 2020 (13:28 IST)

எல்லா கட்சியிலிருந்தும் வந்து குவியுறாங்க! – ஹேப்பி மூடில் தமிழக பாஜக!

தமிழகத்தின் முக்கிய கட்சிகளிலிருந்து பலர் தொடர்ந்து பாஜகவில் இணைந்து வருவதாய் தமிழக பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் பொறுப்பேற்றதை தொடர்ந்து பாஜகவில் உறுப்பினர்களை இணைக்கும் பணி வேகமெடுத்துள்ளது. சமீபத்தில் கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணிபுரிந்து, பிறகு சொந்த ஊரில் தற்சார்பு விவசாயம் செய்து வரும் அண்ணாமலை பாஜகவில் இணைந்தார். இதற்கு முன்னரும் தமிழக முக்கிய கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள் பலர் பாஜகவில் இணைந்தனர்.

இந்நிலையில் நேற்று காளையார் கோவிலில் திமுக ஒன்றிய செயலாளர் சத்தியநாதன் தலைமையில் திமுக, அதிமுக, அமமுக உள்ளிட்ட தமிழக முக்கிய கட்சிகளை சேர்ந்த 2000 பேர் பாஜகவில் இணைந்துள்ளதாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் செப்டம்பரில் 10 ஆயிரம் சிவகங்கை திமுகவினர் பாஜகவில் இணைய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பாஜகவில் பல்வேறு கட்சியினரும் தொடர்ந்து இணைந்து வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.