திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 28 ஆகஸ்ட் 2020 (10:17 IST)

வெட்டிய சித்தப்பா தலையோடு சரணடைந்த கொலையாளிகள்! – சிவகங்கையில் பரபரப்பு!

சொத்து தகராறில் சொந்த சித்தப்பாவையே கொலை செய்து தலையை எடுத்துக் கொண்டு சென்று சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் யூசுப் ரகுமான். அப்பகுதியில் இறைச்சி கடை நடத்தி வரும் இவருக்கும் கோட்டைப்பட்டிணத்தில் உள்ள இவரது அண்ணன் சகுபர் அலிக்கும் நீண்ட நாட்களாக சொத்து பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதன்காரணமாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று யூசுப் ரகுமானின் இறைச்சி கடைக்கு சென்ற சகுபர் அலியின் மகன்கள் இருவரும் தங்களது சித்தப்பாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கைகலப்பு ஏற்பட இருவரும் யூசுப்பை தாக்க, பதிலுக்கு யூசுப்பும் தனது கடையில் இறைச்சி வெட்ட வைத்திருந்த கத்தியை எடுத்துக் கொண்டு தாக்க முயன்றிருக்கிறார். ஆனால் அவரை மடக்கிப்பிடித்த இருவரும் அவரது தலையை வெட்டியுள்ளனர். இதனால் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் யூசுப் இறந்துள்ளார்.

வெட்டிய தனது சித்தப்பாவின் தலையை எடுத்து சென்று காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர் சகுபரின் மகன்கள். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.