திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 7 நவம்பர் 2019 (10:57 IST)

அச்சமென்பதில்லையே! – திமுக போராட்டத்துக்கு மாஃபா ட்வீட்!

மு.க.ஸ்டாலின் மிசா கைது குறித்து விமர்சித்ததற்காக அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் நிலையில் அதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார் அமைச்சர் பாண்டியராஜன்.

1975ம் ஆண்டு எமர்ஜென்சியின் போது மிசாவில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டது குறித்து கீழ்தரமான முறையில் அதிமுக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு கண்டனங்கள் தெரிவித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாஃபா பாண்டியராஜனுக்கு ஆதரவு தெரிவித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார் “ஸ்டாலின் கைதானது குறித்து ஆதாரம் காட்டுங்கள்” என கூறியுள்ளார்.

இந்நிலையில் மாஃபா பாண்டியராஜன் வீட்டின் முன்னால் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் மாஃபா உருவ பொம்மைக்கு பாடை கட்டி எரித்து எதிர்ப்பை காட்டியுள்ளனர். இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்ட மாஃபா ”அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே! உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே! நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்! முதல் முறை என் வீட்டுக்கு எதிரில் என் உருவத்திற்கு பாடை கட்டி இழுத்து தீக்கிரையாக்கியதைக் கண்டேன் !” என்று கூறியுள்ளார்.