செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 5 நவம்பர் 2019 (19:10 IST)

தந்தை பெரியாரா? திருவள்ளுவரா? – கன்ஃபியூஸ் ஆன ஸ்டாலின்!

திருவள்ளுவர் சிலையை அவமதித்தது தொடர்பாக பேசிய ஸ்டாலின் பெரியார் என தவறுதலாக பேசியுள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

தஞ்சை பிள்ளையார்பட்டி அருகே திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்ட விவகாரம் தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிலையை அவமானப்படுத்தியவர்களை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திருவள்ளுவர் சிலை அவமானப்படுத்தப்பட்டதற்கு பல கட்சி தலைவர்களும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சிலை அவமானப்படுத்தப்பட்டது குறித்து பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருவள்ளுவர் சிலை என்பதற்கு பதிலாக பெரியார் சிலை என்று கூறியுள்ளதாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டுள்ள அதிமுக ஐடி விங் ” தந்தை பெரியாரா? தெய்வப்புலவர் திருவள்ளுவரா? திருவள்ளுவர் சிலைக்கு பதிலாக பெரியார் சிலை என மாற்றிக் கூறிய எதிர்க்கட்சித்தலைவர் அவர்கள். சில வார்த்தைகளை தெரியாமல் மாற்றிப் பேசவதை கூட ஏற்கலாம் ஆனால் ஒருவர் பெயரையே மாற்றிக் கூறுவதை எந்த விதத்தில் ஏற்பது?” என்று கேள்வியெழுப்பியுள்ளனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில் சில திமுகவினர் ‘அந்த வீடியோ பெரியார் சிலை தாக்கப்பட்டபோது எடுக்கப்பட்டதாக இருக்கலாம். அதை இப்போது ஷேர் செய்துள்ளார்கள்” என கூறி வருகின்றனர்.