செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 10 பிப்ரவரி 2020 (11:26 IST)

எதிர்கட்சிகளுக்கு பங்கு கிடையாது; எல்லா கிரெடிட்டும் எடப்பாடியாருக்கே!

காவிரி டெல்டா பகுதியை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்துள்ளதின் அனைத்து பெருமையும் முதல்வரையே சேரும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

காவிரி டெல்டா பகுதிகளில் வேளாண்மை முக்கியத்துவம் வாய்ந்த தொழிலாக இருப்பதால் இந்த பகுதிகளை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வந்தது.

இந்நிலையில் காவிரி டெல்டா பகுதியை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து பேசியுள்ள அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ”காவிரி டெல்டாவை பாதுகாக்கும் தமிழக அரசின் இந்த முடிவை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும் என நம்புகிறோம். இந்த பெருமையில் எதிர்க்கட்சிகளுக்கு துளியும் பங்கி கிடையாது. இந்த பெருமை முழுக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமியையே சேரும்” என கூறியுள்ளார்.

மேலும் புதிய திட்டங்கள் டெல்டாவில் தொடங்கப்படாவிட்டாலும் ஏற்கனவே செயல்பாட்டில் இருந்து வரும் ஓ.என்.ஜி.சி மட்டும் தொடர்ந்து செயல்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.