1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified வியாழன், 25 ஆகஸ்ட் 2022 (12:54 IST)

குளத்தில் இறந்து மிதந்த சிறுவன்; தண்ணீரில் விஷமா? – மதுரையில் அதிர்ச்சி!

Fish
மதுரை அருகே உத்தங்குடியில் சிறுவன் குளத்தில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை அருகே உள்ள உத்தங்குடியில் பள்ளி மாணவன் ஒருவன் அங்குள்ள குளத்திற்கு குளிக்க சென்றுள்ளான். நீண்ட நேரமாகியும் சிறுவன் வீடு திரும்பாததால் பெற்றோர் மற்றும் உறவினர் சிறுவனை தேடிய நிலையில் சிறுவன் குளத்தில் பிணமாக மிதந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

சிறுவன் இறந்து இரண்டு நாட்களாகிவிட்ட நிலையில் தற்போது அந்த குளத்தில் இருந்த மீன்களும் செத்து மிதப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் குளத்து தண்ணீரில் விஷம் ஏதும் கலக்கப்பட்டுள்ளதா என்ற ரீதியிலும் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது